ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்து இருசக்கர வாகனம் திருட்டு

0 265

சென்னை மடிப்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தை வாங்க வந்தது போல் நடித்தவர் ஆட்டோ ஓட்டுநரை பிணையாக வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

மடிப்பாக்கத்தில் ஜான் என்பவர் கிரேஸ் பைக்ஸ் எனும் பழைய இரு சக்கர வாகனங்களை விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி ஜானின் தம்பி எட்வின் மட்டும் கடையில் இருந்த நிலையில் ஆட்டோவில் வந்து இறங்கிய ஒரு இளைஞர் விலை உயர்ந்த வாகனம் ஒன்றை விலை பேசி 70 ஆயிரம் ரூபாய்க்கு வாங்க ஒப்புக்கொண்டு அதனை ஓட்டிப் பார்க்க விருப்பம் தெரிவித்தார்.

ஆட்டோ ஓட்டுநரும் அவருக்காக விலை பேசிய நிலையில், அவர் கடையில் இருக்கும் நம்பிக்கையில் எட்வின் இருசக்கர வாகனத்தை இளைஞரிடம் கொடுத்து அனுப்பினார்.

வெகு நேரமாகியும் இளைஞர் திரும்பாததை அடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்டபோது அந்த இளைஞர் யார் என்றே தனக்கு தெரியாது என அவர் பதில் அளித்தார். ஆட்டோவில் சவாரி வந்த அந்த நபர், பைக் குறித்த விவரம் தனக்கு தெரியாது என்றும், பைக் வாங்கித் தந்தால் கமிஷன் தருவதாகவும் கூறியதாலேயே தான் அவருக்காக விலை பேசியதாகவும் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்தார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, பைக்கைத் திருடிச் சென்றதாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த நிரோசன் ரோஷன் பிரபு என்ற இளைஞரின் விவரங்களை சேகரித்துக் கொடுத்தும் போலீசார் மெத்தனமாக இருப்பதாக எட்வின் குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments