தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்..

0 780

தமிழகத்தில் அடுத்து மூன்று தினங்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், 21, 22 ஆம் தேதிகளில் அனேக இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், கடந்த 24 மணி நேரத்தில் அயனாவரத்தில் 13 செ.மீட்டரும், பெரம்பூர், நீலகிரியில் 12 செ.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 10 செ.மீட்டரும், குன்னூரில் 8 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். அடுத்த மூன்று தினங்களில் வெப்பசலனம் மற்றும் அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றார். 

வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும், என்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்றும் புவியரசன் கூறினார். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

சென்னை நகரை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும்  புவியரசன் கூறினார். சென்னை நகரின் அதிகப்பட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன் ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 77 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments