கொலை செய்துவிட்டு கத்தியுடன் செல்லும் இருவர்

0 299

சென்னை நந்தம்பாக்கத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக பாபு என்பவரை நேற்று வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் இருவர் ரத்தக்கரைப்படிந்த கத்தியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.

குன்றத்தூர் அடுத்த கெலடிபேட்டை பகுதியை சேர்ந்த பாபு திமுக பிரமுகர் கிரிராஜன் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு தலைமறைவாக இருந்த பாபுவை நேற்று நந்தம்பாக்கம் பகுதியில் வைத்து கிரிராஜனின் உறவினர்களான மோகன், கிருஷ்ணன் மற்றும் கோடீஸ்வரர் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது.

image

இந்நிலையில், பாபுவை கொலை செய்தவர்கள் ரத்தக்கரைப்படிந்த கத்தியுடன் இருசக்கர வாகனத்தில செல்வதாக கூறப்படும் சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலை வழக்கில் சரணடைந்த குற்றாவாளிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments