7 தமிழர்கள் விடுதலை குறித்த நிலைப்பாட்டை ஆளுநர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

0 239

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 தமிழர்களை விடுவிக்க தமிழக ஆளுநர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பதால்,  ஆளுநர் தனது நிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என முதலமைச்சரிடம் ஆளுநர் மறுத்துவிட்டதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆளுனரின் நிலைப்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிரானதாகும் என தெரிவித்துள்ள ராமதாஸ், அதன் உண்மை தன்மை குறித்து ஆளுநரும், முதலமைச்சரும் தான் மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

7 தமிழர்கள் விடுதலை குறித்த ஆளுநரின் முடிவு என்னவாக இருந்தாலும், அதை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும்,  அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்க மறுத்து ஆளுனர் திருப்பி அனுப்பினால், அதனை மீண்டும் தமிழக அமைச்சரவை ஆளுனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments