மதுரையில் சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது

0 262

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்த விபத்தில் கணவன் - மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது மனைவி சாருலதாவுடன் தங்களது மாருதி ஆம்னி வேனில் திருப்பரங்குன்றத்தில் உள்ள உறவினரைக் காணச் சென்றுகொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார் குண்டு என்ற இடத்தின் அருகில் சென்றுகொண்டிருந்தபோது ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

ஆம்னி வேனை உடனடியாக நிறுத்திவிட்டு வெளியில் இறங்கிவிட்டதால் வெங்கடேசனும், சாருலதாவும் உயிர் தப்பினர். தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் ஆம்னி வேனின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிந்து விட்டது.

பின்னர் தீயணைப்புத்துறையினர் நெருப்பை முழுமையாக அணைத்தனர். போலீசாரின் விசாரணையில் வெங்கடேசன் ஆம்னிவேனில் எல்.பி.ஜி. எரிவாயு பொருத்தி இயக்கி வந்ததும், எரிவாயுக் கசிவால் தீப்பிடித்திருக்கக் கூடும் என்றும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments