கட்டலோனியாவில் பிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு..!

0 167

கட்டலோனியாவில், பிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அமைதி பேரணி நடத்தினர்.

ஸ்பெயின் நாட்டின் ஒரு தன்னாட்சி பகுதியான கட்டலோனியாவில், தன்னாட்சி தொடர்பான சில சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டதை கண்டித்து கடந்த 2010ம் ஆண்டு முதல் அவ்வப்போது விடுதலை போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பிரிவினைவாத தலைவர்கள் 9 பேர், சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு 9 முதல் 13 ஆண்டுகளை வரை சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பிரிவினைவாத தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சிலோனா நகர் சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு அமைதி போராட்டம் நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments