காங்கிரஸ் தலைவரான பின்னர் சோனியா காந்தி முதன் முறையாக பங்கேற்க இருந்த பிரச்சாரம் ரத்து

0 186

காங்கிரஸ் இடைக்காலத் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக சோனியா காந்தி பங்கேற்க இருந்த தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மகேந்திரகர் பகுதியில் காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் மகேந்திரகர் பிரச்சார நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதில் ராகுல் காந்தி பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சோனியா பங்கேற்காததற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் காங்கிரஸ் தலைவரான பின்னர் சோனியா பங்கேற்கவிருந்த முதல் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments