வெளிநாட்டு கரன்சியுடன் சென்ற இளைஞரை கடத்த முயற்சி

0 272

சென்னை திருவல்லிக்கேணியில் பணப்பையுடன் சென்ற இளைஞரை கடத்தி பணத்தைப்பறிக்க முயன்ற 3 பேரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மண்ணடியைச் சேர்ந்த ரபியுதின் என்பவர் சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை பையில் வைத்து இருசக்கரவாகனத்தில் சென்ற போது 3 பேர் அவரை ஆட்டோவில் ஏற்றி பணத்தைப் பறித்து கடத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உதவியால் அவர்கள் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.

பிடிபட்டவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments