திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பாலியல் புகார்

0 309

நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பெண் துணை பேராசிரியராருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வராக பணியாற்றி வரும் துரைராசன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் எல்லைமீறிய முதல்வர் துரைராசன் கையெழுத்து வாங்க சென்ற பேராசிரியையிடம் தவறாக நடந்து, தனது பாலியல் இச்சைக்கு அடிபணியும் படி வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் துரைராசன் மீது திருக்குவளை காவல் நிலையத்தில் ஆடியோ ஆதாரங்களுடன் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்ட திருக்குவளை போலீசார், இதுதொடர்பாக பல்கலைக்கழக தலைமையகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் துணை பேராசிரியர் கொடுத்தது பொய் புகார் என்று பல்கலைக்கழக முதல்வருக்கு ஆதரவாக ஒரு துறையை சேர்ந்த மாணவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். எனவே பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களும் பெற்றோருளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே கல்லூரி முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக திருக்குவளை சுற்றுவட்டார பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments