வடமாநிலங்களில் கர்வா சௌத் பண்டிகை கோலாகலம்

0 143

வடமாநிலங்களில் கர்வா சௌத் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

பாலிவுட் திரைப்படங்களில் கர்வா சௌத் சிறப்பிடம் பெற்றுள்ளது. பாலிவுட் நடிகை சோனம் கபூர் வீட்டில் திருமணமான நடிகைகள் ரவீணா டாண்டன், ஷில்பா ஷெட்டி, பத்மினி கோலாப்பூரி, நீலம் உள்ளிட்டோர் திரண்டு வந்து கர்வா சௌத் பண்டிகையைக் கொண்டாடினர். இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் மனைவி அனுஷ்காவுடன் இணைந்து அந்த பண்டிகையை கொண்டாடினார்.

கணவரின் நீண்ட ஆயுளுக்காக மனைவி முழுநாள் விரதம் இருந்து வானில் முழு நிலவு தோன்றுவதை பார்த்து தனது கணவரின் கையால் விரதத்தை நிறைவு செய்வது இதன் சடங்காகும். நேற்று இரவு இந்தப் பண்டிகை டெல்லி, போபால்.

சண்டிகர், டேராடூன் உள்ளிட்ட நகரங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. போபாலில் உள்ள பாஜகவின் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங்கின் இல்லத்திலும் கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments