அயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்து 5 நீதிபதிகள் அமர்வு ரகசிய ஆலோசனை

0 211

அயோத்தி ராம ஜன்ம பூமி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் 5 நீதிபதிகளும் நேற்று உச்சநீதிமன்ற வளாகத்தில் தனியறையில் ரகசிய ஆலோசனை நடத்தினர்.

அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் விசாரணையை முடித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. மேலும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழுவும் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் கூடிய அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள், சுமார் 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், விசாரணையில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். நவம்பர் 10ம் தேதியில் இருந்து 15ம் தேதிக்குள் தீர்ப்பை வழங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments