போலி சாமியாருக்கு வலைவீச்சு..!

0 250

செய்வினை நீக்கி, குழந்தை பிறக்க வழி செய்வதாக கூறி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

சென்னை, தியாகராயநகர்  கண்ணம்மாபேட்டை சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் வித்யாவுக்கு திருமணமாகி, 7 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்வியின் உறவினர் மாலதி என்பவர் அவருக்கு சாமியார் ஒருவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது அந்த சாமியார் வித்யாவிற்கு செய்வினை இருப்பதாகவும், அதை நீக்கினால் உடனடியாக குழந்தை பிறக்கும் என கூறியுள்ளார்.

மேலும்  செய்வினை நீக்க, 4 லட்ச ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு செல்வி ஒரு லட்ச ரூபாய் தருவதாகவும்,  அதனை கொண்டு செய்வினையை நீக்குமாறும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சாமியார், நேற்று முன்தினம் மாலை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு, பணத்துடன் வருமாறு செல்வியிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று அங்கு வந்த சாமியார், செல்வியிடம் ஒரு லட்ச ரூபாயினை வாங்கிய பின்னர்  செய்வினை நீக்க, பரிகாரம் செய்ய வேண்டும் என்றும், அதற்குரிய பொருள்கள் மற்றும் கோழி ஆகியவற்றை வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றுள்ளார்.

ஆனால் வெகுநேரம் ஆகியும் சாமியார் திரும்பி வராததால் ஏமாற்றம் அடைந்த செல்வி வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு  இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். நூதன முறையில் ஏமாற்றிய சாமியாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments