செல்போன் ரிங்கிங் நேரம் குறித்து 2 வாரங்களில் டிராய் முடிவு

0 527

செல்போன் ரிங்கிங் நேரம் குறித்து டிராய் 2 வாரங்களில் முக்கிய முடிவெடுக்க இருக்கிறது.

ஜியோ நிறுவனம் தனது நிறுவன எண்களில் இருந்து பிற நிறுவன எண்களுக்கு மேற்கொள்ளப்படும் அவுட் கோயிங் அழைப்புகளுக்கான ஐ.யு.சி. கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்கும் நோக்கில் ரிங்கிங் நேரத்தை குறைத்துவிட்டதாக டிராயிடம் ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் குற்றம்சாட்டின.

ஜியோவுக்கு பதிலடியாக அந்நிறுவனங்களும் ரிங்கிங் நேரத்தை குறைத்தன. இந்நிலையில், ஏர்டெல், வோடாபோன் ஐடியா நிறுவனங்கள், தரைவழி இணைப்புகளை செல்போன் இணைப்புகளாக கணக்கு காட்டி முறைகேடாக வருவாய் ஈட்டுவதாகவும் (undue enrichment ), அந்நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று டிராயிடம் ஜியோ புகார் அளித்துள்ளது.

ஐ.யு.சி. கட்டணம் குறித்த முடிவை டிராய் எடுக்கவுள்ள நிலையில், அந்த அமைப்பை குழப்ப ஜியோ முயற்சிப்பதாக ஏர்டெல் பதிலளித்துள்ளது.

இதுபோல் செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், ரிங்கிங் நேரம் குறித்து 2 வாரங்களில் டிராய் முடிவெடுக்க இருப்பதாக அந்த அமைப்பு அதிகாரி கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments