புதுச்சேரி அரசின் திட்டங்களுக்கு தடை போடுகிறார் கிரண்பேடி - ஸ்டாலின்

0 209

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து தடை போடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை ஆதரித்து புறாகுளம் பகுதியில் பிரசாரம் செய்த அவர், தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி நேரடியாக நடப்பதாகவும், புதுச்சேரியில் கிரண்பேடி மூலம் பாஜகவின் மறைமுகமாக ஆட்சி நடப்பதாகவும் குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆளுநர் தடை போடுவதால், இலவச அரிசி, இலவச வேட்டி-சேலை தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். என்.ஆர் .காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியை துரோகி என மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஏனாம் பகுதியை ஆந்திரத்துக்கு தாரை வார்க்க முயற்சி நடப்பதாகவும், இதில் ஆளுநர் பச்சை துரோகம் செய்கிறார் என்றும் அவர் கூறினார். புதுச்சேரியில் ஆளுநரை எதிர்த்து போராடக்கூடியவர் முதலமைச்சராக இருப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் அப்படியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments