வங்கதேச எல்லை படை சுட்டதில் இந்திய வீரர் உயிரிழப்பு

0 478

வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டதில், இந்திய எல்லை பாதுகாப்பு படை ஏட்டு உயிரிழந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் காக்மாரிசார் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் மூன்று பேர், பத்மா ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். இரு நாடுகளுக்கும் இடையில் பாயும் அந்த ஆற்றில் ரோந்து வந்த வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினர் மீனவர்கள் மூன்று பேரையும் பிடித்துச் சென்றனர். பின்னர் இருவரை மட்டும் விடுவித்த அவர்கள், இந்திய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளை பேச்சுவார்த்தைக்கு வரக் கூறுமாறு மீனவர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து காக்மாரிசாரில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு வந்த மீனவர்கள் இதுகுறித்து தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த முகாமின் அதிகாரியும், வீரர்கள் 5 பேரும் ஒரு படகில், வங்க தேச எல்லை பாதுகாப்பு படை முகாமிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவரை விடுவிக்க மறுத்த வங்க தேச படையினர், இந்திய வீரர்களை முற்றுகையிடவும் முயன்றனர். இதனால் இந்திய வீரர்கள் தங்கள் படகில் ஏறி புறப்பட்டனர். அப்போது திடீரென வங்கதேச வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் எல்லை படை ஏட்டு விஜய் பவான்சிங் உயிரிழந்தார். மற்றொரு வீரர் காயமடைந்தார். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments