முதலாமாண்டு மருத்துவ மாணவர்களின் 2 கைகளின் விரல் ரேகை பதிவை அனுப்பும்படி கல்லூரிகளுக்கு நோட்டீஸ்

0 130

மருத்துவப் படிப்பு முதலாமாண்டு பயிலும் மாணவ-மாணவிகளின் 2 கைகளிலும் உள்ள விரல் ரேகைகளை பெற்று அனுப்பும்படி அனைத்து அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து எழுந்துவரும் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், உண்மை நிலையை கண்டறியவும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், துணை முதல்வர்களுக்கு மருத்துவ கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், திங்கள்கிழமைக்குள் 2 கைகளின் விரல் ரேகைகளை பெற்று 3 செட்டுகளாக சீலிடப்பட்ட உரையில் அனுப்ப வேண்டும் என்றும், பிறப்பு, கல்வி சான்றுகளை அனுப்பி வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதும்போது மாணவ, மாணவியரின் ஒரு கை விரல் ரேகை மட்டும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டது. அத்துடன் 2 கைவிரல் ரேகைகளை ஒப்பிட்டு பார்த்து மருத்துவ கல்வி இயக்குநரகம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments