நல்லிணக்க அடிப்படையில் 3 மீனவர்களை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

0 158

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேரை நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த கடல்ராஜா, ரமேஷ், செந்தில் ஆகிய 3 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது. இதையடுத்து காங்கேசம்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதனிடையே சிறைபிடிக்கப்பட்ட 3 மீனவர்களையும் நல்லிணக்க அடிப்படையில் விடுதலை செய்யுமாறு இலங்கை சட்டத்துறை அமைச்சகம் பரிந்துரை கடிதம் அனுப்பியதைடுத்து மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதை தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 3 பேரும் சர்வதேச அகதிகள் முகமான மெரிஹானவில் தங்க வைக்கப்பட்டு பின் ஓரிரு நாட்களில் விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக இந்திய துணை தூதரக அதிகாரி பாலசந்தர் தெரிவித்தார். இன்று ஒரே நாளில் 14 தமிழக மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments