சித்தா, ஆயுர்வேதா, யுனானி மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க உத்தரவு-உயர்நீதி மன்றம்

0 105

சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய மருத்துவ முறை படிப்புகளான ஆயுர்வேதா, யோகா, நேச்சுரோபதி, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி போன்ற படிப்புகளில், 278 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளதால், மாணவர் சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிடக் கோரி, சென்னையை சேர்ந்த மாணவர் நவீன் பாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த மனுவில், ஏராளமான காலியிடங்கள் இருந்ததால், பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதைப் போல, இந்திய மருத்துவ முறைப் படிப்புகளுக்கும் நீட் தகுதி மதிப்பெண்களை குறைக்க உத்தரவிட வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை நவம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments