வைசிரீகல் விடுதியை புனரமைக்க மத்திய அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு

0 157

ங்கிலேய ஆட்சியின் போது வைசிராய்கள் தங்குவதற்காக சிம்லாவில் கட்டப்பட்ட வைசிரீகல் விடுதியை புணரமைக்க மத்திய அரசு 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

ஆங்கிலேய ஆட்சியின் போது இதமான தட்பவெப்ப சூழலுக்காக இமாச்சல பிரதேசத்தின்  சிம்லா கோடை காலத் தலைநகராக செயல்பட்டு வந்தது. அந்த சமயத்தில் ஆங்கிலேய அரசின் இந்தியப் பிரதிநிதியாக கருதப்பட்ட வைஸ்ராய்கள் தங்குவதற்காக சிம்லாவில் வைசிரீகல் விடுதி கட்டப்பட்டது.

1878ம் ஆண்டு துவங்கிய இதன் கட்டுமானப்பணிகள் 1888 ம் ஆண்டு நிறைவடைந்தன. டப்ரின் பிரபு துவங்கி இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டன் பிரபு வரை 13 வைஸ்ராய்கள் இங்கு தங்கி பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சுமார் 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தை தற்போது சீரமைக்க ஒப்புதல் வழங்கியுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதற்காக 65 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கட்டிடமானது விரைவில் புதுப்பொலிவு பெறவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments