தீபாவளியை முன்னிட்டு பட்டாசு விற்பனைக் கண்காட்சி

0 339

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பட்டாசு விற்பனையாளர் சங்கம் சார்பில் இந்தக் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடைகள் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குறைந்தபட்சம் 200 சதுர அடி பரப்பளவிலான 63 கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கடைகளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யபப்ட்ட மூலப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே உரிமம் வழங்கப்படுகிறது.

இந்தக் கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது சிறிய ரகம் முதல் வாண வேடிக்கை ரக பட்டாசுகள் வரை ஒரே இடத்தில் கிடைப்பதால் தீவுத்திடல் பட்டாசுக் கண்காட்சிக்கு ஆண்டுக்காண்டு வரவேற்பு அதிகரித்து வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments