ரூ.450 கோடி மோசடி: ஈரோடு தனியார் நிறுவன தலைவர் கைது

0 602

450 கோடி ரூபாய்க்கு போலி ரசீதுகள் அளித்து மோசடி செய்ததாக ஈரோட்டை சேர்ந்த தனியார் நிறுவன தலைவரை ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அரசு ஒப்பந்த பணிகளிலும், உள்கட்டமைப்பு பணிகளிலும் ஈரோட்டை சேர்ந்த அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்துக்கு சொந்தமாக ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழகத்தில் உள்ள இடங்களில் விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜிஎஸ்டி இயக்குநரக ஜெனரல் அலுவலக அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 450 கோடி ரூபாய்க்கு பொருள் வாங்கியது, பொருள் விநியோகித்தது போன்று போலி ரசீதுகள் அளித்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்நிறுவன தலைவர் சுப்பிரமணியம் அசோக் குமாரை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் அசோக் குமாரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரை 30ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments