பிகில் படத்துக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

0 359

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை, உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

பிகில் படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, உதவி இயக்குனர் செல்வா என்பவர் தாக்கல் செய்த வழக்கு, உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயக்குனர் அட்லி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிகில் படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் எனவும் வாதிட்டார்.

படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்  காப்புரிமை மீறப்பட்டதாக, கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை எனவும், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறினார். பட நிறுவனம் தாக்கல்  செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெற கீழமை நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments