பரம்பிக்குளம் - ஆழியாறு, பண்டியாறு - புன்னம்புழா திட்ட ஒப்பந்த மறு ஆய்வுக் குழு அமைக்க முடிவு

0 133

நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தமிழக அரசு இருகுழுக்களை அமைத்துள்ளது. கடந்த மாதம் 25-ஆம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவனந்தபுரம் சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, நதி நீர் பிரச்சனையை தீர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ஒப்பந்த மறு ஆய்வு மற்றும் அதனைச் சார்ந்த இனங்கள் குறித்து ஒரு குழுவும் மற்றும் பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தினை செயல்படுத்த ஒரு குழுவும் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதன் படி பரம்பிக்குளம் திட்டத்திற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், சுப்பிரமணியன், இளங்கோவன், முத்துசாமி, முனாவர் சுல்தானா ஆகியோர் அடங்கி குழுவையும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்திற்காக மணிவாசன், சுப்பிரமணியன், தமிழரசன், சிவலிங்கம், முனாவர் சுல்தானா ஆகியோர் அடங்கிய குழுவும் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் தேவாலா காட்டில் உருவாகும் பாண்டியாறு, கேரளாவில் நுழைந்து புன்னம்புழா என்ற பெயரில் சாளியாற்றில் கலந்து கள்ளிக்கோட்டையில் கடலில் கலக்கிறது. பாண்டியாற்றில் அணைகள் கட்டி, தண்ணீர் 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைத்து மோயாற்றில் கலந்து, அங்கிருந்து பவானி சாகர் அணைக்கு ஆண்டுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் கொண்டு செல்வது பாண்டியாறு-புன்னம்புழா திட்டமாகும்.

பரம்பிக்குளம், ஆழியாறு திட்டத்தின் படி ஆனமலையாறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, நீராறு, தூணக்கடவு ஆறு, பெருவாரிபள்ளம் ஆறு, பாலாறு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் ஆனமலையாறு அணை கட்டுவது குறித்தும், வறட்சி காலத்தில் நீரை சம மாக பகிர்வது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments