ரஷ்யாவின் தலையீட்டை தொடர்ந்து குர்து படையுடன் இணைந்த சிரியா ராணுவம்

0 312

துருக்கியின் தாக்குதலை எதிர்கொள்ள, சிரியா ராணுவம் குர்துக்களுடன் இணைந்து, மன்பிஜ் நகரில் தனது படைகளை குவித்துள்ளது.

சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றியிருந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக அந்நாட்டின் வடக்கு பகுதியில் வாழும் குர்துக்களுடன் அமெரிக்கா கைகோர்த்தது. அங்கு போர்பதற்றம் தணிந்ததை அடுத்து, அமெரிக்கா தனது படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது.

இதைத்தொடர்ந்து சிரியாவில் வாழும் குர்து போராளிகளை எதிரியாக கருதும்  துருக்கி வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் குர்து மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், போரை நிறுத்த குர்து- சிரியா ராணுவம் இணையும்படி அண்மையில் ரஷ்யா கூறியது.

இதைத்தொடர்ந்து, வடக்கு சிரியா முழுவதும் ரஷ்யா, சிரியா மற்றும் குர்து ஜனநாயகப்படையின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

மேலும் அலேப்போ மாகாணத்தின் மன்பிஜ் நகரை துருக்கி தாக்கவுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளதால் மன்பிஜ் நகரம், ரக்பா மாகாணத்தில் உள்ள தப்கா நகரங்களில் சிரியா தனது ராணுவத்தை குவித்து, ராணுவ தளத்தையும் அமைத்து தாக்குதலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments