பனி அடர்ந்த புல்வெளியில் ஓடும் காட்டெருமைகள்

0 348

அமெரிக்காவின் தெற்கு டகோடா பகுதியில் உள்ள பனிப்படர்ந்த தேசிய பூங்காவில் நான்கு காட்டெருமைகள் சாலையின் குறுக்கே ஓடும் காட்சி வெளியாகியுள்ளது.

தெற்கு டக்கோடா பகுதியில் 22ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பேட்லேண்ட்ஸ் தேசிய பூங்காவில் காட்டெருமைகள் காண்பது அரிதான ஒன்று. இந்நிலையில் நான்கு காட்டெருமைகள் பனி அடர்ந்த புல்வெளியை நோக்கி வாகனங்களுக்கு இடையே ஓடும் காட்சியை உலக வனவிலங்கு ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்த பூங்காவில் தற்போது ஆயிரத்து 200 காட்டெருமைகள் இருப்பதாகவும், அதனை ஒருசில சுற்றுலாப் பயணிகள் நேரில் பார்த்துள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், 1963ம் ஆண்டில் இருந்து பேட்லேண்ட்ஸ் தேசிய பூங்காவில் வசித்து வரும் காட்டெருமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments