கர்ப்பத்துடன் தவிக்கும் ஐரோப்பிய மாணவி ..! தொழில் அதிபர் கைது

0 658

ரோப்பிய நாட்டில் இருந்து துபாய்க்கு படிக்க சென்ற மாணவியை காதல்வலையில் வீழ்த்தி கர்ப்பிணியாக்கி விட்டு தலைமறைவான சென்னையைச் சேர்ந்த இளம் தொழில் அதிபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

சென்னை அமைந்தகரை ரெயில்வே காலனி 3 வது தெருவை சேர்ந்தவர் ரூமேஸ் அகமது. 30 வயதான இவர் வெளிநாடுகளுக்கு இறால் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார்.

அந்தவகையில் துபாய் சென்றபோது அங்கு ஐரோப்பிய நாடான லித்வேனியாவில் இருந்து தங்கி கல்லூரியில் படித்து வந்த உக்னே பெரேவரி சவைத் என்ற 22 வயது மாணவியுடன், ரூமேஸ் அகமதுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ரூமேஸ் அகமதுவின் காதல்வலையில் விழுந்த அந்த மாணவி கர்ப்பிணியானதாக கூறப்படுகிறது. விவகாரம் ஆகிவிடக்கூடாது என்று எண்ணி அந்த அயல்நாட்டு மாணவியை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார் ரூமேஸ் அகமது.

கர்ப்பத்தை கலைத்துக் கொண்டால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நிர்பந்தப்படுத்தி ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அந்த மாணவிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். நாட்கள் நீண்டு கொண்டே செல்ல ரூமேஸ் அகமது மீண்டும் அவரை துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார். இருவரும் இணைந்து சுற்றியதாகவும், இதனால் அவர் மீண்டும் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமான மாணவியை மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்த ரூமேஸ் அகமது, தனது வீட்டிற்கு அழைத்து செல்லாமல் எழும்பூரில் அறை எடுத்து தங்கவைத்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

ரூமேஸ் வீட்டிற்கு சென்றால் அங்குள்ளவர்கள் தன்னை மிரட்டுவதாக ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் இளம் தொழில் அதிபர் ரூமேஸ் அகமது மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ரூமேஸ் அகமதுவைக் கைது செய்த ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார், லித்வேனிய நாட்டுப் பெண்ணை மிரட்டுவதற்கு உடந்தையாக இருந்த அவரது தந்தை அப்துல் கரீமைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments