இடி - மின்னல் தாக்குதல்.. பாதுகாப்பு வழிமுறைகள்..!

0 588

டகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் இடிமின்னல் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது அவசியம். அதற்கான முன் எச்சரிக்கைகள் பற்றிய தொகுப்பை காணலாம்.

காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மழை மேகங்கள் ஒன்றுடன் ஒன்று உராயும் போது வானத்தில் மின்சாரம் உண்டாகி பூமியில் பாயும் போது இடி- மின்னல் ஏற்படுகிறது. இடி மின்னல் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் ஒளியின் வேகத்தால் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும்.

சில வினாடி கழித்து தான் இடியோசை கேட்கிறது. மின்னலின் போது வெளிப்படும் மின்சாரம் பூமிக்குள் பாயும் போது மரத்தையோ நிலத்தையோ தாக்கவல்லது என்பதால் இடி மின்னல் தாக்கும் போது மரத்துக்கு அடியில் ஒதுங்க கூடாது என்று எச்சரிக்கிறார்கள். உயரமான கட்டிடங்களில் இடிதாக்கி கருவி பொருத்தப்படுவதால் பூமிக்கடியில் சென்று விடுகிறது.

மழை காலத்தில் தவிர்க்க முடியாத நேரங்களில் வீட்டில் இல்லாமல் வெளியில் இருக்கும் போது, இடி மின்னல் வெட்டும் நேரங்களில் நம்மை பாதுகாத்துக் கொள்ள சில வழிமுறைகளை இப்போது காண்போம்.

வெட்ட வெளியாக இருந்தால் கூட்டமாக நில்லாமல் தனித்தனியாக நிற்கவும். முடிந்தால் 100 அடி இடைவெளி விட்டு நின்று கொள்ளலாம் அல்லது குத்துக் கால் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள். மரத்தின் அடியில் நிற்க வேண்டாம். குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரம் அல்லது அதற்கும் அதிகமான மரத்திலிருந்து தள்ளி நிற்கவும்

கட்டிடங்களின் பக்கவாட்டு சுவர்களில் ஒதுங்கி நிற்க வேண்டாம். கட்டிடத்திற்கு உள்ளே இருப்பது பாதுகாப்பானது. கார் போன்ற வாகனங்களில் உள்ளே இருக்கும்போது இடி மின்னல் வெட்டினால் வாகனத்திற்கு உள்ளேயே இருப்பது பாதுகாப்பானது.

பயத்தில் வாகனத்தை விட்டு வெளியே வந்தால் நிலத்தில் பாயும் இடி மின்னலின் தாக்கம் நம்மையும் தாக்கும். மழைக் காலம் இப்போது தொடங்கியுள்ளதால் இவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments