பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் என உளவுத்துறை எச்சரிக்கை

0 315

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பஞ்சாப், ஜம்முவில் உள்ள பாதுகாப்பு படை முகாம்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு நீக்கியது. அப்போதே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 முதல் 10 பயங்கரவாதிகள் ஊடுருவி, தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் மீண்டும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பஞ்சாப், ஜம்முவில் உள்ள பாதுகாப்பு படை முகாம்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மற்றும் ஜம்முவில் உள்ள விமானப்படை முகாம்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கையை விமானப்படை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments