வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை பணி: 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்

0 356

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட வாரியாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, தமிழ்நாடு அரசு, பல்வேறு முன்னெச்செரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த வகையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஹர்மிந்தர் சிங், கடலூருக்கு ககன் தீப் சிங் பேடி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பீலா ராஜேஷ், புதுக்கோட்டைக்கு சாம்பு கல்லோலிகர் என ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்ட ஆட்சியருடன் இந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதி அங்கு மட்டும், 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments