ரியல் எஸ்டேட் அதிபர் தலைமறைவு - தகவல் தெரிவிக்கும்படி போஸ்டர்

0 488

சேலத்தில் வின்ஸ்டார் இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர் குறித்து தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சேலத்தை தலைமையிடமாக கொண்டு நாமக்கல், ஈரோடு, கோவை, சென்னையில் வின்ஸ்டார் இந்தியா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வந்தது.

இதன் மூலம் நிலம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக வின்ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சிவக்குமார் மீது பல வழக்குகள் உள்ளன.

இது தொடர்பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சிவக்குமார், சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்துள்ளார்.

தற்போது சிவக்குமார் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் குறித்து தகவல் அறிந்தால் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தெரிவிக்கும்படி சேலம் சுற்றுவட்டாரத்தின் பல இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

சிவக்குமாரால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற பெயரில் இந்த போஸ்டர்களை ஒட்டியவர்கள் குறித்தும் தலைமறைவாக உள்ள சிவக்குமார் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments