எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டும் - கிருஷ்ணசாமி

0 729

எஸ்சி பட்டியலில் இருந்து தேவேந்திரகுல வேளாளர்களை நீக்க வேண்டுமென புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

பட்டியலின வகுப்பில் உள்ள குடும்பன், பண்னாடி, காலாடி, கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன் மற்றும் வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்கக் கோரிக்கை எழுந்ததை அடுத்து, அது குறித்து ஆய்வு நடத்த ஆதிதிராவிட நல இயக்குநர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் முதற்கட்ட விசாரணை கடந்த மார்ச் மாதம் முடிந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட விசாரணை கூட்டம் சென்னை எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநரகத்தில் நடைபெற்றது. இதில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments