அமெரிக்காவின் பொருளாதார தடை பற்றி கவலை இல்லை - துருக்கி அதிபர்

0 279

அமெரிக்காவின் பொருளாதார தடை குறித்து கவலை இல்லை எனக் கூறியுள்ள துருக்கி அதிபர் டயீப் எர்டோகன், குர்துக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய எர்டோகன், குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுதற்காக, சிரியா அரசுப் படைகள், மன்பிஜ் நகர் வந்து சேர்ந்திருப்பதால் தங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றார். மன்பிஜ், சிரியாவுக்கு சொந்தமான நிலம் தானே என்று தெரிவித்த எர்டோகன், தெளிவாக இலக்கை நிர்ணயித்து விட்டதாகவும், எல்லையில் உள்ள தீவிரவாதிகளை ஒழிக்காமல் விடப் போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுவரை குர்துக்களுக்கு எதிரான சண்டையை நிறுத்துவதற்கு சாத்தியமே இல்லை என எர்டோகன் சூளுரைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments