நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படவில்லை, அந்தத் தேர்தல் செல்லாது - தமிழக அரசு

0 392

நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி நடத்தப்படவில்லை என்றும் அந்தத் தேர்தல் செல்லாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாண சுந்தரம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்ததாகவும், பதவிக்  காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை முந்தைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என்றும் விஷால் தரப்பில் வாதிடப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாததால் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமிப்பது தொடர்பாக, தமிழக அரசு, தற்போதைய நிர்வாகிகளுக்கே நோட்டீஸ் அனுப்பியதாகவும், அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் சங்கங்களின்  பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முந்தையை உறுப்பினர்களி பதவியை ஆறு மாதங்கள் நீட்டிப்பு செய்ய சங்க விதிகளில் இடமில்லை என்றும் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது என்றும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து விசாரணையை நீதிபதி வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments