மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

0 396

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உள்பட 7 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் அருகே கீழ முட்டுக்காடு கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயப் பணியாளர்கள் நாற்று நடுதல், களையெடுத்தல், நிலக்கடலை பறித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

மாலை 3 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் லட்சுமி அம்மாள், கலைச்செல்வி, சாந்தி, விஜயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments