டாக்சிபாட் வாகனத்தை பயன்படுத்தும் முதல் விமான நிறுவனம் என்ற பெயரை பெற்றது ஏர் இந்தியா

0 482

விமானங்களை இழுத்துச் செல்ல டாக்சிபாட்  எனப்படும் வாகனத்தை பயன்படுத்தும் முதல் விமான நிறுவனம் என்ற பெயரை ஏர் இந்தியா பெற்றுள்ளது.

விமான நிலையத்தில் விமானங்களை நிலைக்குக் கொண்டு வரவோ, புறப்படும் போது ரன்வேக்கு செல்லும் வரையோ விமான எஞ்சின்களை இயக்கும்போது அதிக எரிபொருள் செலவாகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இத்தாலிய மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் இணைந்து விமானத்தை இழுத்துச் செல்லும் ரோபாட்டிக் தொழில் நுட்பம் சார்ந்த டிராக்டர் வாகனத்தை தயாரித்துள்ளன.

விமான எஞ்சின்கள் இயங்காத நிலையில் இந்த வாகனம் மூலம் விமானத்தை இழுத்துச் செல்லும் போது 85 சதவீத எரிபொருள் மிச்சப்படுத்தப்படுகிறது.

ஏர் இந்தியா வாங்கியுள்ள இந்த வாகனம் டெல்லியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட விமானத்தை பயணிகளுடன் முதன் முறையாக வெற்றிகரமாக ரன்வேக்கு இழுத்துச் சென்றது. இந்தியா முழுதும் உள்ள விமான நிலையங்களில் மொத்தம் 40 டாக்சி பாட் வாகனங்கள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments