பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

0 177

தேனி மாவட்டம் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 18ஆம் தேதி தொடங்கி 30 நாட்களுக்கு விநாடிக்கு 98 கன அடி வீதம் பெரியாறு அணையில் இருந்து 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

255 மில்லியன் கன அடி நீரை திறக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் 4614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களில் 18ஆம் தேதி தொடங்கி 120 நாட்களுக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1037 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருப்பதாகவும் இதன் மூலம் 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments