அடுத்த 48 மணிநேரத்தில்... மழைக்கு வாய்ப்பு..!

0 690

ருகிற 17ஆம் முதல், வடகிழக்குப் பருவமழைத் தொடங்க உள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில், தமிழ்நாட்டின், பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல், கனமழை வரையில், பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பகுதிகளிலிருந்து, தென்மேற்கு பருவமழை படிப்படியாக விலகி, அடுத்த 48 மணி நேரத்தில், முற்றிலுமாக விலகிவிடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகிற 17ஆம் தேதி முதல், தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு கடலோர ஆந்திரா, ராயல்சீமா, உட்புற கர்நாடகா, மற்றும் கேரளாவில், வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில், லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது.

சென்னையில், இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. வருகிற 17ஆம் தேதி மற்றும் 18ஆம் தேதிகளில், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு ஆகிய கடற்பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரையில், சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளில், மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 8 சென்டி மீட்டரும், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 7 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் இந்த தகவல்களை தெரிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவில் பதிவாகும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments