இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்திய புகாரில் சிறப்பு எஸ்.ஐ, காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

0 1234

சிதம்பரத்தில் இருசக்கர வாகனத்தில் கூடுதலாக குழந்தைகளை அழைத்து வந்ததாகக் கூறி தம்பதியருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சிறப்பு எஸ்.ஐயும் காவலரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

கடந்த 13ஆம் தேதி சிதம்பரம் நகர சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகனும் காவலர் சார்லஸும் கஞ்சி தொட்டி முனையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியை மடக்கி, இருசக்கர வாகனத்தில் இருவர்தான் வரவேண்டும், நான்கு பேர் வந்தது ஏன் என்றும் அசல் ஆவணங்களைக் கேட்டும் அபராதம் விதித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானதை அடுத்து சிறப்பு எஸ்.ஐயையும், காவலரையும் ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட எஸ்.பி அபினவ் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments