சிலிண்டர் விநியோகிக்கும் நபர் டிப்ஸ் பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

0 806

சிலிண்டர் வினியோகத்தின் போது டிப்ஸ் வசூலிக்கப்படுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலிண்டர் கட்டணத்துடன், வினியோகக் கட்டணமும் ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வினியோகிப்பவர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 முதல் 100 ரூபாய் வரை கூடுதலாக கட்டாயமாக வசூலிப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் புகார் அளித்தும் எண்ணெய் நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடையவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுள்ளதாகவும் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த விவரங்கள் ஏன் அந்தந்த எண்ணெய் நிறுவனங்களின் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டிப்ஸ் இல்லை என தெரிவித்தால் அடுத்த முறை சிலிண்டர் வினியோகம் செய்யும் போது வீடு பூட்டபட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை உள்ளதாகவும் கூறினர்.

டிப்ஸ் கேட்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-க்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments