தரமற்ற குடிநீரை அருந்துவதால் ஏற்படும் நோயைத் தடுக்க முயற்சி

0 247

தரமற்ற குடிநீரை அருந்துவதால் ஏற்படும் நோய்களைத் தடுக்கும் முயற்சியாக, வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் தரத்தை அறிய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலக தரநிர்ணய நாளையொட்டி டெல்லியில் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், டெல்லியின் 11 இடங்களில் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில், தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயித்த அளவைவிட மோசமாக இருந்ததாக குறிப்பிட்டார். இதையடுத்து நாடு முழுவதும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், 3 மாதங்களில் அவற்றின் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தரக் கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்துரைத்துள்ள குடிநீர் தரத்தை உறுதி செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும், 6 மாதங்களில் இந்த ஆய்வு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் பாஸ்வான் குறிப்பிட்டார். தரமற்ற குடிநீரால் உருவாகும் காலரா, டைபாய்டு காய்ச்சல், வயிற்றுப் போக்கு, கல்லீரல் அழற்சி போன்ற நோய்களால் கடந்த 5 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments