அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச்சாவடி கட்டண வருவாய் ரூ. 1 லட்சம் கோடியாக அதிகரிக்கும்

0 183

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி கட்டணம் மூலம் கிடைக்கும் வருவாய் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,  24 ஆயிரத்து 996 கிலோ மீட்டர் தொலைவு நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இந்த ஆண்டு இறுதியில் இது 27 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் சுங்கச் சாவடி கட்டணம் முழுமையாக மின்னணு முறைக்கு மாறிவிடும் என்று தெரிவித்த மத்திய அமைச்சர், இதன் மூலம் சுங்கச் சாவடி கட்டண வசூலில் இருந்த பிரச்னைகள் முழுமையாக நீங்கிவிடும் என்றார்.

மேலும்  முழுமையான மின்னணு முறையால், அடுத்த 5 ஆண்டுகளில் சுங்கச் சாவடி மூலம் கிடைக்கும் கட்டண வருவாய் ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் மேலும் பல தரமான சாலைகளை அமைக்க முடியும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments