இந்தியப் பொருளாதார நிலைமை கவலையான இடத்தில் உள்ளது

0 572

பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ஆசியாவில் 3 பெரிய பொருளாதார நாடான இந்தியாவின் பொருளாதார நிலைமை கவலையான சூழ்நிலையின் விளிம்பிற்குச் சென்றுள்ளதாகத் தெரிவித்தார். நிதி நெருக்கடி இந்தியாவை ஆண்டுக்கு ஆண்டு குறைத்து வந்தாலும், 2016 முதல் 9 விழுக்காட்டை பொருளாதாரம் எட்டவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உலக வங்கி சமீபத்தில் இந்தியாவின் வளர்ச்சித் திட்ட விகிதத்தை 6 புள்ளி 9 விழுக்காட்டிலிருந்து 6 விழுக்காடாக குறைத்துள்ளதைச் சுட்டிக் காட்டிய ரகுராம் ராஜன், தொழில்துறை உற்பத்தியில் கடந்த ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பை உடைத்துவிட்டதாகவும் ரகுராம் ராஜன் குற்றம் சாட்டி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments