மசாலா நிறுவன சேமிப்பு கிடங்கு தீவிபத்து - பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

0 308

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா நிறுவன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.

கோடாங்கிபட்டி கிராமத்தில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா எனும் தனியார் தொழிற்சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் ஆண்டிபட்டி, பெரியகுளம், தேனி, போடி, பாளையம் ஆகிய பகுதியிலிருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எட்டு மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குளிரூட்டபட்ட சேமிப்பு கிடங்கில் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 2 ஆயிரம் டன் மசாலா பொருட்கள் உட்பட பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments