நீட்தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

0 337

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சிறையில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்த பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

மாணவ-மாணவிகள் உள்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த மாணவர்கள் பயின்ற கல்லூரிகளில் சான்றிதழ்களை சரிபார்த்த பேராசிரியர் குழுவுக்கு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

எஸ்ஆர்எம்கல்லூரி, தேனி மருத்துவகல்லூரி, சத்யசாய் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களிடம் ஏற்கனவே விசாரணை முடிந்த நிலையில், இரண்டாம் நாளான நேற்று பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியை சேர்ந்த பேராசிரியர்கள் குழுவிடம் நேற்று விசாரணை நீடித்தது.

மாணவர்கள் சேர்க்கையின் போது அளிக்கப்பட்ட சான்றிதழ்களை சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியர்கள் சமர்ப்பித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை அறிக்கையை சிபிசிஐடி போலீசார் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments