தாமிரபரணி குடிநீர் சாக்கடை நீரானது..! பொது மக்கள் வேதனை

0 318

குழாயில் சாக்கடை நீர் போல வரும் குடிநீருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முக்காணி பொதுமக்கள் புகார் அளித்த நிலையில், 24 மணி நேரத்தில் குடிநீரை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி கழிவு நீர் தாமிரபரணி கூட்டு குடி நீர் திட்ட குழாயில் கலப்பதால் குடிநீர் சாக்கடை நீர் போல வருவதாக முக்காணி மற்றும் பூஞ்சோலை பகுதி மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மக்கள் கேன்களில் உள்ள குடி நீரையே வாங்கி பருகுவதாக கூறி சரி செய்யாமல் இழுத்தடித்த நிலையில்.

பக்கத்து ஊரான ஆத்தூரில் நல்ல தூய்மையான குடி நீர் விநியோகிக்கப்பட்டுவருவதாகவும், தங்கள் ஊரில் சாக்கடை நீர் குடிநீராக விநியோகிக்கப்படுவதாகவும் கூறி முக்காணி பொது மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் ஆதாரத்துடன் மனு அளித்தனர்.

இந்த சீர்கெட்ட குடி நீரால், நோய்பரவுவதாகவும் பள்ளி குழந்தைகள் அவதியுறுவதாகவும், அதனை சரி செய்ய தக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

மக்கள் கையில் வைத்திருந்த குடி நீரை பார்த்த மாவட்ட ஆட்சிதலைவர் சந்தீப் நந்தூரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த பகுதியில் உள்ள குடிநீரேற்று நிலையங்களில் ஆய்வு செய்து தக்க தீர்வு காண உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில் வாழவல்லான் நீரேற்று நிலையத்திற்கு பதிலாக நல்ல தண்ணீராக உள்ள ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் சப்ளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ஒரு பக்கம் தாமிரபரணி பாசன நிலங்கள் வேட்டையாடப்பட, வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஏரலைக் கடந்த பின் அழுக்குகள் தேங்கிய குட்டையாக காட்சி அளிக்கின்றது என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments