கட்டுக்கட்டாக சிக்கிய நோட்டு சோதனையின் பின்னணி...

0 1097

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு சென்னை  உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் கிரீன் பார்க் கல்வி குழுமத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரொக்கம் சிக்கிய நிலையில், இந்த நிறுவனம் செய்த முறைக்கேடு என்ன? சோதனையில் சிக்கியது எப்படி? என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு... 

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிரீன் பார்க் கல்வி குழுமத்தில் மெட்ரிக் பள்ளிகள், நீட் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த குழுமம் நடத்தும் நீட் பயிற்சி மையங்களில் மாணவ, மாணவிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாகவும், குறைந்த பட்சமாக 3 லட்சத்திலிருந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் முடிவில் கிரீன் பார்க் கல்வி குழுமத்தின் கணக்கில் வராத 150 கோடி ரூபாய் சொத்து ஆவணங்களும், கணக்கில் வராத 30 கோடி ரூபாய் பணமும் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது.

நாமக்கலில் உள்ள கிரீன் பார்க் கல்வி குழுமத்தின் தாளாளர் சரவணன் மற்றும் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் வீட்டில் கைப்பற்றபட்ட ஆவணங்களில் லட்சக்கணக்கில் கட்டணத்தை வசூலித்து கொண்டு அதை கணக்கில் காட்டாமல் சில ஆயிரங்கள் மட்டுமே வசூலித்ததாக போலியான கணக்கை காண்பித்து கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments