ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

0 245

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.இதில் சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நாளை வழங்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments