குடியரசுத் தலைவர், பிரதமருடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு

0 328

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நெதர்லாந்து மன்னரும், ராணியும், குடியரசுத் தலைவரையும், பிரதமரையும் சந்தித்தனர்.

நெதர்லாந்து மன்னர் வில்லியம் முதல்முறையாக, அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று டெல்லி வந்த மன்னர் வில்லியம் மற்றும் ராணி மேக்சிமாவிற்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மன்னர் வில்லியம் மற்றும் ராணி மேக்சிமா இருவரும் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்கள் இருவரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்தனர். அங்கு அவர்களுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதன் பின்னர் அவர்கள் இருவரும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்தனர்.இதைத்தொடர்ந்து இருவரும் டெல்லியில் நடைபெற்ற 25வது தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க அமர்வில் கலந்து கொண்டனர். டெல்லியில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு,
மன்னர் வில்லியம், ராணி மேக்சிமா இருவரும் மும்பை மற்றும் கேரளாவிற்கும் செல்ல உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments