பரவும் மெட்ராஸ் ஐ - பாதுகாப்பது எப்படி?

0 154

மழை காலங்களில் பரவும் மெட்ராஸ் ஐ நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி...

மெட்ராஸ் ஐ என்ற பெயரைக் கேட்டாலே சிலர் அச்சமடைவார்கள். எங்கே நமக்கும் வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயமே அதற்கு காரணம்.. ஏன் இதற்கு மெட்ராஸ் ஐ என்ற பெயர் வந்தது என்பதை அறிய வேண்டும் என்றால், நூறாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியுள்ளது.

1918 ஆம் ஆண்டு சென்னையில் வினோதமான கண் நோய் பரவியது. பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண் எரிச்சல், வலியால் அவதிப்பட்டனர்.

இதையடுத்து எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அதற்கான பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அடினோ என்ற வைரசால் பரவும் தொற்று நோயால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தால் மெட்ராஸ் ஐ என்றே அழைக்கப்பட்டது.

மழை காலங்களில் பரவும் மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்டு எழும்பூர் கண் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. தனியார் மருத்துவமனைகளை நாடியும் பலர் செல்கின்றனர்.

இந்த நோய் வந்தால் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சொட்டு மருந்து, தாய்பால் போன்றவற்றை கண்களில் விடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

அன்றாடம் பயன்படுத்தும் தலையணை, துண்டு போர்வை போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் மருத்துவரின் ஆலோசனையாக இருக்கிறது.

மெட்ராஸ் ஐ நோயால் பாதிக்கப்பட்ட நபர்களை அருகில் இருப்பவர்கள் பார்ப்பதால் நோய் பரவாது என்றுமருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments