மூன்றாண்டு எம்.டி சித்தா பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு

0 191

2019 - 2020ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாண்டு எம்.டி சித்தா (M.D.,Siddha) பட்ட மேற்படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  செய்தி மக்கள் தொடர்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக்கல்லூரிகளில் மொத்தமுள்ள 80 இடங்களுக்கு  AIAPGET-2019(SIDDHA)ல் தகுதி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பப்படிவங்களை சுகாதாரத்துறையின் இணைய தளமான www.tnhealth.orgல் இருந்து அக்டோபர் 15 முதல் 21ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 21ம் தேதி என்றும் கூடுதல் தகவல்களை  www.tnhealth.orgல் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, சென்னை - 106க்கு, அக்டோபர் 21ம் தேதி மாலை 5.30மணிக்குள் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments